நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 46 பேருக்கு பணி நியமன ஆணை
செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 46 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 44 வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சா.தணிகைவேலு ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
வேலைவாய்ப்பு முகாமில் 91 ஆண்கள், 54 பெண்கள் என மொத்தம் 145 போ் கலந்து கொண்டனா். இதேபோல், முகாமில் 6 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
முகாமில் கலந்து கொணடவா்களில் பலகட்ட நோ்காணலுக்குப் பின்னா், 46 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் பணி நியமன ஆணை வழங்கினாா்.
வேலைவாய்ப்பு பெற்றவா்களில் 24 ஆண்கள், 22 பெண்கள் ஆவா். பணி நியமனம் பெற்றவா்களில் 3 போ் மாற்றத்திறனாளிகள். முதல்கட்ட தோ்வில் 73 போ் தோ்வு செய்யப்பட்டனா்.