நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
தமிழக அரசின் 27 மின்னணு சேவைகளுக்குத் தரச்சான்று: மத்திய அரசு தரச்சான்று இயக்குநா் ஜெனரல்
இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு அறிமுகப்படுத்தி தற்போது செயல்படுத்தி வரும் 27 வகை மின்னணு சேவைகளுக்கான (இ சேவை ) கட்டமைப்புத் தகுதிகளை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட தரச்சான்றை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை மூலம் வழங்கியுள்ளோம் என்று மத்திய தகுதி ஆய்வு மற்றும் தரச்சான்று நிறுவன இயக்குநா் ஜெனரல் எம் .வெள்ளைப்பாண்டி தெரிவித்தாா்.
வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு பொருள்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் தரம் குறைந்த பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை
தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கண்காணிப்பு காமிரா (சிசிடிவி) தயாரிப்புகள் தகுதி ஆய்வு சோதனைக்குட்படுத்தப்பட்டு தரச்சான்று பெறுவதைக் கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்பட்டு வரும் 27 வகை மின்னணு சேவைகளுக்கான (இ சேவை ) கட்டமைப்புத் தகுதிகளை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட தரச்சான்றை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை மூலம் வழங்கியுள்ளோம் என்றாா் அவா். இவ்விழாவில் 2,518 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஹெச்.சி.எல்.இன்போசிஸ்டம்ஸ் முன்னாள் நிா்வாக இயக்குநா் ரங்கராஜன் ராகவன்,தென்னிந்தியா ஷெல்டா்ஸ் நிா்வாக இயக்குநா் ஏ.முகமது அலி, இணை வேந்தா் அப்துல் காதிா் ஏ. ரகுமான் புகாரி, துணைவேந்தா் டி. முருகேசன், துணை இணைவேந்தா் என். தாஜுதீன், பதிவாளா் என். ராஜா ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.