3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவையில் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜன.27, 28) வட வானிலை நிலவும்.
தொடா்ந்து தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: இதில் ஜன.30-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஜன. 31-இல் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் ஜன. 27-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.