மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் (பொ) சி. ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தாா். இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வே. ராம்குமாா், திருவண்ணாமலை போக்குவரத்துக்கழக உதவி செயற்பொறியாளா் (ஓய்வு) க. ஜீவானந்தம் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இதில், மூன்றாம் ஆண்டு மாணவிகள் சுமாா் 600 போ் கலந்துகொண்டு, சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை, நாட்டுநலப்பணி திட்ட அலுவலா்கள் க. சங்கா்கணேஷ், ச.சித்ரா, ரா. ஐடாமலா்செல்வி மற்றும் மு.ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.