புதுச்சேரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: நெல்லை ரயில்வே, அரசு போக்குவரத்து ஊழியர் கைது!
புதுச்சேரியைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மருந்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கிறிஸ்துவர் என்பதால், பிரசங்கக் கூட்டத்துக்கு ரயிலில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனிடையே, இவருக்கும் திருநெல்வேலி ரயில் நிலைய காவலர் சுபாஷுக்கும் (37) இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் விருந்துக்கு அழைத்த சுபாஷ், இளம்பெண்ணுக்கு மதுவும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போதையில் இருந்த இளம்பெண்ணை சுபாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவருடைய நண்பரான அரசு போக்குவரத்து ஊழியர் முருகேசனையும் (37) வரவழைத்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதையும் படிக்க:டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
இதனையடுத்து, போதையில் இருந்து தெளிந்த இளம்பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்து, அவர்கள் இருவரிடமிருந்தும் தப்பித்து, காவல் நிலையத்தில் சுபாஷ் மற்றும் முருகேசன் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி, சுபாஷையும் முருகேசனையும் கைது செய்தனர்.