ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்
புது தில்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் விவரங்கள் வெளியான விவகாரத்தில், காவல்துறை ஆணையருக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை முதலில் வெளியிட்டவர் யார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல்அறிக்கை, பொதுமக்கள் பார்க்கும் வகையில் எவ்வளவு நேரம் இருந்துள்ளது. முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்புக்காக, நாங்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருந்தோம். மத்திய அரசின் தொழில்நுட்பம் காரணமாகவே முதல் தகவல்அறிக்கை கசிந்துள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரி என்ன செய்வார்? என்று வாதிடப்பட்டது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் முதல் தகவல் அறிக்கை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இருந்தது. அதற்கு தமிழக காவல்தறை அதிகாரி என்ன செய்வார்? என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு, காவல்துறை பொறுப்பாகாது என்றும் குறிப்பிட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் இன்னமும் உள்ளதா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.