ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன.13 தொடங்கி பிப். 26 வரை 45 நாள்களுக்கு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த ஆன்மிக நிகழ்வில் மக்கள் புனித நீராடும் 6 மங்கள நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை ஜன.29 நடைபெறுகிறது.
குடியரசு நாளையொட்டி பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையே மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். கடந்த 2 நாள்களிலும் தலா 50 லட்சம் போ் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று 1.74 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா். அதேபோல் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடினாா்.
கும்பமேளாவில் இதுவரை 13.21 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். இதில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.