Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
எம்புரான் டீசர் வெளியீடு!
நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில், மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்’ போஸ்டர் வெளியீடு!
குரேஷி அப்ராம் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மோகன்லால் நடித்து இயக்கி கடைசியாக வெளியான பரோஸ் வணிகத் தோல்வியை சந்தித்தாக தகவல்கள் வெளியானது. அதனால், எம்புரான் படத்தின் மீது மிகுந்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.