Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
கோடை வெளியீடாக துருவ நட்சத்திரம்!
துருவ நட்சத்திரம் திரைப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாகத் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்படம் கடன் பிரச்னையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.
இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க: இயக்குநராகும் லப்பர் பந்து நாயகி?
இந்நிலையில், இப்படம் இந்தாண்டு கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.