இயக்குநராகும் லப்பர் பந்து நாயகி?
நடிகை சஞ்சனா இயக்குநராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சஞ்சனா வதந்தி இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, லப்பர் பந்து படத்தில் நாயகியாக கலக்கினார்.
இவர் இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க: டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்த நிலையில், சஞ்சனா அடுத்ததாக இயக்குநராக ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.