13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைலுக்கு இணைய சேவை! வினாடிக்கு 2 ஜிபியைவிட அதிகம்?
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை வழங்கும் சோதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாளை மேற்கொள்ளவுள்ளது.
மொபைல் போன்களுக்கு தரைவழி கோபுரங்கள்தான் இணைய சேவையை வழங்குகின்றன. ஆனால், செயற்கைக் கோள்களிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை (Direct-to-Cell) வழங்கும்வகையில் பீட்டா சோதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாளை (ஜன. 27) மேற்கொள்ளவுள்ளது.
இதன் மூலம், தரைவழி கோபுரங்கள் இல்லாத பகுதிகளிலும் மொபைல் போன்களில் இணைய சேவையைப் பயன்படுத்தவும், தொடர்பு கொள்ளவும் இயலும்.
இதையும் படிக்க:போர் நிறுத்த காலத்திலும் இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை வழங்கிய டிரம்ப்!
இந்த முயற்சியானது, தகவல்தொடர்புகளில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும் என்று கூறிய எலான் மஸ்க், இந்த புதிய சேவையைப் பயன்படுத்துவதற்கு புதிய வகை மொபைல் போன்களோ கூடுதல் வன்பொருளோ (Hardware) தேவையில்லை; சாதாரணமாக நாம் உபயோகிக்கும் மொபைல் போன்களிலேயே பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார். இந்த சேவையின் மூலம் கிராமப்புற மக்கள் அதிகளவில் பயன்பெறுவர் என்றும் கூறினார்.
இனிவரும் காலங்களில் ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்யும் செயற்கைக்கோள்கள், இணைய சேவையை மேலும் அதிகரிக்கும்; வினாடிக்கு 2 ஜிபி என்ற அளவைவிட வேகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.