செய்திகள் :

திருப்பத்தூர்: அபாயகர மருத்துவக் கழிவுகள்; துர்நாற்றம் வீசும் இறைச்சிக் கழிவுகள் - பாழாகும் பாலாறு!

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள், குப்பைகள் கொட்டி பாலாறு பாழாகி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடத்தை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தால், தூய்மைப் பணியாளர்கள் வந்து சாலை அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருக்கும் குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்திச் செல்வார்கள். ஆனால் இந்த இடத்தைக் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள்.

மறுபுறம் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சில நபர்கள் குப்பைகளை நெருப்பு மூட்டி எரிக்கின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, அந்தப் பகுதியில் புகை மூட்டம் உருவாவதால், வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால், அந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மீன்களுக்கும், பறவைகளுக்கும், பாலாற்றின் அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்" என்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "இங்கு அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பகல் - இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர் குப்பைகளை மூட்டை கட்டி அப்படியே வீசிச் செல்கிறார்கள். மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள் சில நேரங்களில் இறந்துபோன விலங்குகளைக்கூட இங்கே வீசுகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாள்களாக இந்த இடத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மேலும் அருகாமையில் இருக்கும் சில பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமலேயே நேரடியாக இந்தப் பாலாற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. எங்களுடைய விவசாய நிலங்கள் எல்லாம் வீணாய் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சூழல் இருந்தால் நாங்கள் எப்படி இங்குப் பிழைப்பு நடத்துவது.

பாலாறு நாங்கள் வணங்கும் குல தெய்வம் போல். இங்கிருந்து தான் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எங்களுக்கு எதாவது நோய் வந்தால் அரசாங்கம் தான் பொறுப்பு. நாங்களும் துப்பரவு பணியாளர்களிடம் பல முறை‌ கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அலட்சியத்தை மட்டுமே காட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இப்படியே தொடர்ந்தால், பெரும் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும்" என்று வேதனையுடன் கூறினார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து பாலாற்றை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங்இந்தியா எலெக்ட்... மேலும் பார்க்க

Global Hyperloop Competition: ஆசியாவில் முதன்முறையாக சென்னையில் ஹைப்பர்லூப் போட்டி; எங்கு? எப்போது?

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியைப் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.ஐஐடிசென்னை, ஐஐடிஎம் பிரவர்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: `பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றம்சாட்டுவதா?' - உச்ச நீதிமன்றம் காட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில்... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா... காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் | Photo Album

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்... மேலும் பார்க்க

`பெரியார் தமிழகத்தின் கலங்கரை விளக்கம்; தற்குறிகள்தான் அவரை விமர்சிப்பார்கள்' - துரை வைகோ காட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில... மேலும் பார்க்க

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்: லிவ்இன், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு... விதிமுறைகள் இதுதான்!

நாட்டில் கோவாவில் மட்டும் பொதுசிவில் சட்டம் அமலில் இருந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் இன்று முதல் பொதுசிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டே உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பா.ஜ.க அரசு பொது... மேலும் பார்க்க