இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: `பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றம்சாட்டுவதா?' - உச்ச நீதிமன்றம் காட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில் கசிந்த விவகாரம், காவல்துறை மீது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்திருந்ததும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து, கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதில், சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR லீக் ஆன விவகாரத்தில் காரணமானவர்கள் ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த அதிகாரிகளிடம் இருந்து ரூ.25 லட்சம் வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது குறித்து கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், "FIR லீக் ஆனதால் தான் மாணவி மீது மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் கொடுமை அரங்கேறியுள்ளது. மாணவியின் செயல்தான் குற்றம் நடைபெற காரணம் என்பது போல் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி தான் குற்றம் நடைபெற காரணம் என சமூகத்தில் கருத்துகள் கூறப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை குற்றத்திற்கு காரணம் என கூறுவது குற்றவாளிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்" என்று தெரிவித்திருக்கிறது.