செய்திகள் :

வேங்கைவயல்: ”தனி மனித பிரச்னையே காரணம்” - நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேங்கைவயல்

இதுதொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணையில் அரசுத்தரப்பில், வேங்கைவயல் வழக்கில் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல 87 டவர் லொகேஷன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் உள்ள புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆகவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

வேங்கைவயல் குடிநீர்த்தொட்டி

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, "வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்னையே இது போன்று நடக்கக் காரணம். கடந்த 2 வருடங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று பேசியிருக்கிறார்.

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்ன... மேலும் பார்க்க

ECR: காரில் பெண்களை துரத்தும் இளைஞர்கள்; கண்டிக்கும் கட்சிகள்; என்ன நடந்தது? - காவல் துறை விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்ப... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மலம் வீச்சு; டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர... மேலும் பார்க்க

ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்' - திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள ந... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; சீரமைக்கப்பட்ட தொரப்பாடி சாலை!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையாக தொரப்பாடி சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் இருந்து முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த சாலையின் நடுவே கடந்த ஆண்டு அக்டோ... மேலும் பார்க்க