செய்திகள் :

ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்' - திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக

post image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பெரியாரின் சொந்த ஊரில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் திமுக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கொள்கைரீதியிலான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க பிரசாரக் களத்தில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் திருக்குறளை இழிவாகப் பேசினார் என்றும் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அத்துடன் தமிழ்மொழி, தமிழ்த்தேசியம் குறித்தும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், மாதவ கிருஷ்ணா வீதி பகுதிகளில் இந்தியில் அச்சிட்டு திமுக-வினர் விநியோகித்துள்ள துண்டறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துண்டறிக்கை

அந்த துண்டறிக்கையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் புகைப்படத்துடன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று இந்தியில் "மத்தான் கரோ உகத சூரஜ்" என அச்சிடப்பட்டுள்ளது. இந்த துண்டறிக்கை சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் வைராலாக்கி வருகின்றனர். அதில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக... தற்போது, அதே இந்தியை அச்சிட்டு வாக்கு கேட்கும் நிலைமைக்குச் சென்றுவிட்டது. இதுதான் திமுக-வின் மொழி உணர்வா? என்று அந்த துண்டறிக்கையை வைரலாக்கி வருகிறது.

துண்டறிக்கை

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "இந்திரா நகர்,மாதவ கிருஷ்ணா வீதி பகுதிகளில் பல தலைமுறைகளாக ராஜஸ்தான் மக்கள் வாழ்கின்றனர். அதில், சுமார் 7 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களிடம் வாக்கு சேகரிக்க இந்தியில் துண்டறிக்கை அச்சிட்டு வாக்கு கேட்பது வழக்கம். கடந்த காலங்களில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலின்போது, இந்தியில் அச்சிட்டப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகித்துள்ளோம். இதற்கும் மொழி உணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றனர்.

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.ஆனால்,... மேலும் பார்க்க

`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை

மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, ... மேலும் பார்க்க

Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?

ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்... மேலும் பார்க்க

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி க... மேலும் பார்க்க

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க