ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?
ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்.
ஆம்...அமெரிக்க அரசே, அந்த நாட்டு அரசு ஊழியர்களை தங்களது பணிகளில் இருந்து விலக சொல்லியிருக்கிறது. அப்படி விலகினால் சில சலுகைகளும் உண்டு என்றும் அறிவித்துள்ளது.
என்ன விஷயம்?
அமெரிக்க அரசு மனித மேம்பாட்டு துறையான ஆபீஸ் ஆஃப் பெர்சோனல் மேனேஜ்மெண்ட் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "அரசு ஊழியர்கள் விருப்பப்பட்டால் தற்போது தங்களது வேலைகளை ராஜினாமா செய்யலாம். அப்படி செய்தால் அவர்களுக்கு 8 மாத சம்பளம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மெயிலின் படி, அரசு ஊழியர்கள் உடனே ராஜினாமா செய்தாலும், பணியில் இருந்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ, அந்த அத்தனை சலுகைகளும் வரும் செப்டம்பர் மாதம் வரை அவர்களுக்கு அப்படியே கிடைக்கும்.
காரணம் என்ன?
இந்த சலுகை அனைத்து ஊழியர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு சில முக்கிய துறைகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
ட்ரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, 'அரசு செலவினங்களை குறைப்பது' முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
நண்பர் வழியில்...
இந்த அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்காவில் ஒலித்தது. ஆனால், அது ட்ரம்பிடம் இருந்து அல்ல...அவரது நண்பர் எலான் மஸ்கிடம் இருந்து.
தான் ட்விட்டரை வாங்கிய புதிதில் அதன் ஊழியர்களுக்கு, "பணியில் இருந்து விலகலாம் அல்லது கடுமையான பணி சூழலில் வேலை பார்க்கலாம்" என்ற இரண்டு ஆப்ஷன்களை தந்தார் எலான் மஸ்க். இதே ரூட்டை தான் தற்போது ட்ரம்பும் பிடித்துள்ளார். ட்ரம்ப் அரசின் இந்த முடிவுக்கு பின்னால் எலான் மஸ்க் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஒருவேளை இப்போது பணியில் இருந்து விலகாவிட்டால், எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்கள் சொன்ன அதே பாணியை ட்ரம்ப் அரசில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கலாம்.
இன்னும் செலவு தான்!
அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக சொன்னால், அரசின் செலவுகள் இன்னமும் அதிகமாகும் என்று இரண்டு காரணங்களை அடுக்குகின்றனர் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒன்று, இவர்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் தொகை வரப்போகும் பட்ஜெட்டில் சிக்கலை எழுப்பும்.
இரண்டு, அரசு ஊழியர்கள் பணி விலகினால், அதிக காண்ட்ராக்டர்கள் உள்ளே வருவார்கள். அவர்களால் செலவுகள் இன்னமும் அதிகரிக்கும்.
'இது' பெரிய சிக்கல்
இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான பெரிய சிக்கல் எழும். இப்போதிருக்கும் அனுபவமிக்க அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகினால், அரசு இயந்திரம் நிச்சயம் பாதிக்கும். மேலும், வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது அமெரிக்கா. இந்த சமயத்தில் ஊழியர்கள் பெரிய அளவில் வேலையை இழந்தால், இது நிச்சயம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இதனால், மீண்டும் பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்கிறார்கள்.