10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!
Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!
ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.
இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்னைகள் புகைந்த வண்ணமிருந்தன. சமீபத்தில்கூட பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கக் கூடாது என அரசிடம் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் வேண்டுகோள் வைத்துப் போராட்டமெல்லாம் நடத்தினர். இருப்பினும் ஓலா, உபர் டாக்ஸிகள் விலைக் குறைவாக இருப்பதால் மக்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர். அதனால், ஆயிரம் போராட்டங்கள் ஆங்காங்கே புகைந்தாலும், ஆன்லைன் டாக்ஸிகள் அமோகமாக ஓடி வருகின்றன.
இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் மக்களுக்கு நல்ல பயன் இருந்தாலும், அதை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு சரியான லாபமில்லை என்கின்றனர். அதுவும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களுக்கும் சரியான லாபம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி ஓலா, உபர் நிறுவனங்கள் 25% என வருமானத்தில் அதிக பங்கு கேட்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இப்படியான பல்வேறு காரணங்களால் பிப்ரவரி 1-ம் தேதி ஓலா, உபர் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
ஓலா, உபரை நம்பியிருக்கும் மக்கள் பிப்ரவரி 1-ம் தேதி உஷாராக தங்களது பயணங்களைத் திட்டுமிட்டுக் கொள்வது நல்லது. பிப்ரவரி 1-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூறுகின்றனர்.