செய்திகள் :

`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை

post image
மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, சில மாநிலங்களில் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 2019ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அல்லது தமிழ்நாட்டில் பிறந்த மாணவர்களுக்காக 50 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில இட ஒதுக்கீடு சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது.  எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை சமூக நீதியைக் கடைப்பிடிப்பதில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன் மாநிலத்தின் உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.

இந்த தீர்ப்பில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களில் மட்டுமே செல்லும் என்றும் மற்ற ஒதுக்கீடுகள் குறிப்பாக மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு அல்லது பிறந்தவர்களுக்கு என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ கட்டமைப்பு  அதிகமாக இருக்கிறது. மேலும் MD, MS, DM, MCH போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை அதிகமாக உள்ளது.

மா. சுப்ரமணியன்
மா. சுப்ரமணியன்

குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் 2294 இருக்கின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்று இதுவரை 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 1207 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு பின்வரும் ஆண்டுகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அந்த மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும். வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.ஆனால்,... மேலும் பார்க்க

Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?

ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்... மேலும் பார்க்க

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி க... மேலும் பார்க்க

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்ன... மேலும் பார்க்க