செய்திகள் :

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

ஆனால், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக, ஏரியின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்திலும், சாலையின் ஓரங்களிலும் குப்பைகள், நெகிழிப் பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு, ஏரி தூய்மையற்ற நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த ஏரியையொட்டி பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் மக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்தக் குப்பைகள் எப்படி இங்கே வருகிறது, யார்க் குப்பையைப் போடுகிறார்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று விசாரித்தபோது, ``சமூகப் பொறுப்பற்ற சிலர் இரவு நேரங்களில் வீட்டில் உள்ள குப்பைகளை மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து இங்கு வீசிவிட்டுச் செல்கின்றனர். அதேபோல இறைச்சிக் கடைகளில் உள்ள பிராய்லர் கழிவுகளை ஏரிக்கரையிலேயே போட்டுவிடுகின்றனர். இதனால் எங்களுக்குத்தான் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்றனர். 

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் கடந்த நவம்பர் மாதம், `குப்பைக் கிடங்காக மாறும் திருப்பத்தூர் ஏரி; நோய் பரவும் அபாயம்... நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

விகடன் செய்தி எதிரொலியாக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று, ஏரியின் அருகே உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளார்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின்... மேலும் பார்க்க

`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை

மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, ... மேலும் பார்க்க

Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?

ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்... மேலும் பார்க்க

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி க... மேலும் பார்க்க

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்ன... மேலும் பார்க்க