20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எ...
வேலூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; சீரமைக்கப்பட்ட தொரப்பாடி சாலை!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையாக தொரப்பாடி சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் இருந்து முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த சாலையின் நடுவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதற்காக இந்த சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அந்தப் பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பு செய்யப்படாமல் ஜல்லி கற்களால் நிரம்பி விபத்து ஏற்படுத்தும் அபாயகரமான சாலையாக இருந்தது. இந்த சாலை சீரமைப்பு பணியும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த சாலையை ஒரு நிமிடத்திற்கு சராசரியாக நூறு வாகனங்கள் வரை கடந்து செல்கின்றன. மேலும் வேலூரின் முக்கிய பிரதான கல்வி நிறுவனங்களை இணைக்கும் சாலையாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து இந்தச் சாலையில் இருக்கும். எனவே இந்த சாலையை சீரமைப்பு செய்யக்கோரி விகடனில் கடந்த மாதம் “வேலூர்: ஜல்லி கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்; எப்போது சீரமைக்கப்படும் தொரப்பாடி சாலை?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதில் நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அவர் கூடிய விரைவில் இந்த சாலையின் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறோம். விரைவில் சாலையை சீரமைப்பு செய்கிறோம் என்று கூறி இருந்தார். தொடர்ந்து அவரிடம் இந்த சாலை பணிகள் தொடர்பாக கேட்டு அறிந்தோம். அதன் எதிரொலியாக தற்போது இந்த சாலை சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன.
ஜல்லி கற்களால் நிரம்பி அபாயகரமான சாலையாக இருந்த தொரப்பாடி சாலை தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, அனைவரும் தற்போது இந்த சாலையை எளிதாக கடந்து செல்கின்றனர். தற்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரமான காலை மற்றும் மாலை நேரங்களிலும் இந்த சாலையை பாதுகாப்பான முறையில் மக்கள் கடந்துசெல்வது குறிப்பிடத்தக்கது.