திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மலம் வீச்சு; டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை - நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை பள்ளி திறந்தவுடன் வகுப்பறைகளை ஆசிரியர்கள் திறந்து உள்ளனர். அப்போது பத்தாம் வகுப்புக்கான அறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனித மலம் வீசப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வகுப்பறை முழுவதும் வீசப்பட்டுள்ள மனித மலங்களை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். மனித மலங்களை வீசியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, "மர்ம நபர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா அல்லது மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிவில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவரும்" என்றனர். பள்ளி வகுப்பறைக்குள் மனித மலம் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs