ஆக்லாந்து தொழில்நுட்பபல்கலையுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் மீனாட்சி சூப்பர் ஸ்பெ...
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்களின் பணி நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மனுக்களை ஜன. 27 முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இவற்றை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்தாண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது.
அதில், சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்க அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!
மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்தத் தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
கொல்கத்தா உயா்நீதிமன்றம் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மே 7, 2024 அன்று, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ தனது விசாரணையைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் முந்தைய தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைத்திருந்தாலும் வழக்கின் முடிவுகளுக்கு உட்பட்டு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களின் சம்பளம் திரும்பப் பெறப்படும் என அறிவித்தது.
கடந்த ஜன. 15 அன்று, 25,753 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளதாக மனுதாரர்கள் பலரும் வாதிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் பணி நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான மனுக்களை நாளை (ஜன. 27) முதல் விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.