செய்திகள் :

KM Cherian: சென்ற இடமெல்லாம் சிறப்பு.. இந்தியாவின் முதல் பைபாஸ் சர்ஜன் `பத்மஶ்ரீ செரியன்'

post image
50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றியவர்... பல முன்னோடி இதய அறுவை சிகிச்சைகள் மூலம் உலகின் கண்களை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் கே.எம்.செரியன்.

1942-ம் ஆண்டு, கேரளா செங்கனூரில் பிறந்தவர் செரியன். தன்னுடைய ஆரம்பப் பணியை வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியராக தொடங்கினார்.

1973-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சையில் FRACS படிப்பை முடித்தார். பின்னர், நியூசிலாந்தில் பணியாற்றிய செரியன், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இவர் சீனாவில் உள்ள யாங்சே பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றும்போது இவர் தனது 26-வது பிறந்த நாள் அன்று, முதன்முதலாக வெற்றிகரமாக ஓப்பன் ஹார்ட் சர்ஜரியை செய்தார்.

முதல் டு பல...

இந்தியாவில் மூளை சாவை சட்டப்பூர்வமாக்கியப் பிறகு, முதல் இதய மாற்று சிகிச்சை செய்தவர் இவரே. பின்னர், இந்தியாவின் முதல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை, முதல் குழந்தை இதய மாற்று சிகிச்சை என பல சாதனைகளை செய்து, அது இந்தியாவில் அது 'பல' தடவை வெற்றிகளாக மாற அடித்தளமிட்டவர்.

1991-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஶ்ரீ விருதைப் பெற்ற செரியன், 1990 - 1993 ஆண்டு இந்திய ஜனாதிபதியின் கவுரவ அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

மருத்துவர் ஆன பிறகு...

இந்தியாவில் மட்டுமல்ல, 'சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதுப்போல இவருக்கு பல நாடுகள் கவுரவ பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தது.

உலகம் எங்கிலும் பிரபலமான ஃபிரண்டியர் குழுமத்தின் நிறுவனர் ஆவார். இவருக்கு கேரளாவில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது.

மருத்துவராக ஆனப்பின்னர், இவரது ஆரம்ப பணியான ஆசிரியர் பணியை மறக்கவில்லை. இவர் பயண நெடுகிலும் பல வருங்கால மருத்துவர்களுக்கு தனது அனுபவங்கள் மூலம் வழிகாட்டியுள்ளார்.

இந்தியா மருத்துவத்துறைக்கு பல புதுமைகளையும், கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய செரியன், கடந்த 24-ம் தேதி தனது சுயசரிதையான 'ஜஸ்ட் ஆன் இன்ஸ்ட்ருமென்டேஷன்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது 82-வது வயதில் காலமாகியுள்ளார்.

தைரியம்தான் அப்பாவின் அடையாளம்! - டாக்டர் கே.எம்.செரியன் - சந்தியா செரியன்

அவருடைய மகள் விகடன் பேட்டியில் தனது அப்பா செரியன் குறித்து அவரது மகள் சந்தியா செரியன் வார்த்தைகள்...

"வேலைக்காகவும் மேல்படிப்புக்காகவும் அப்பா சில வருஷங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தார். பிறந்த முதல் சில வருஷங்கள் நானும் அங்கேதான் இருந்தேன். நியூசிலாந்தில் கடற்கரைக்கு அருகில் மிஷன் பே என்கிற இடத்தில் எங்க வீடு. ஒரு வார இறுதி நாளில் நியூஸ் பேப்பரை வெட்டி, அப்பா எனக்குப் பட்டம் பண்ணிக்கொடுத்தது இன்னும் நினைவிலிருக்கு. இந்த மாதிரியான தருணங்கள் எங்களுக்கு அரிதாகவே கிடைச்சிருக்கு. அதனால ஒவ்வொரு சம்பவமும் இப்போதும் எனக்கு மறக்கலை. அப்பாகிட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் கார் இருந்தது. எப்பவாவது அவருக்கு டைம் கிடைச்சா, என்னை, அந்த காரில் ப்ளூ மவுன்ட்டனுக்குக் கூட்டிட்டுப் போவார். ஆஸ்திரேலியாவில் இருந்தவரையில் கிடைச்ச இந்த வாய்ப்புகள், நாங்க இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு இன்னும் அரிதாகிப் போயின.

வியக்கும் ஆளுமை!

நான் வியக்கிற, மதிக்கிற ஆளுமைகளில் முதலிடம் எங்கப்பாவுக்குத்தான். தன்னுடைய தொழிலில் இந்தளவுக்கு வெற்றிகரமா இருக்கார்னா, அதுக்குப் பின்னாடி அப்பா சந்திச்ச போராட்டங்களும், கடந்துவந்த கசப்பான அனுபவங்களும் கொஞ்சமில்லை. எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அப்பா சோர்ந்துபோயோ, மிரண்டுபோயோ நான் பார்த்ததில்லை. மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுக்கும், பாண்டிச்சேரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸுக்கும் அப்பாதான் ஃபவுண்டர். அந்த இரண்டுக்குமான நிலங் களைக் கண்டுபிடிச்சது, கட்டடம் எப்படி வரணும்னு டிசைன் பண்ணினதுன்னு ஒவ்வொரு செங்கல்லிலும் அப்பாவின் பங்கு இருக்கு. ஒருநாள் ஓய்வு கிடைச்சாலும் இந்த ரெண்டு இடங்களிலும்தான் அப்பாவின் நேரம் போயிருக்கு. ஆனா, சிலருடனான கருத்து வேறுபாடுகள் காரணமா, அப்பா இந்த ரெண்டு இடங்களிலிருந்தும் வெளியே வந்தார்.

இந்தியாவின் முதல் பைபஸ் சர்ஜன் செரியன் - யார் இவர்?!(K.M.Cherian)

60 வயசுல...

மற்ற எல்லாரும் ரிட்டையராகிற 60 வயசுலதான் அப்பா தன்னுடைய சொந்த நிறுவனம் குறித்து யோசிச்சார். தான் பார்த்து வளர்ந்த ரெண்டு பிரமாண்ட கட்டடங்களை விட்டு விலகியிருக்கிற அந்த தைரியம்தான் அப்பாவின் அடையாளம். விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘உன்னைச் சுற்றியுள்ள உலகம் ஆயிரம் பேசும். உன்னைக் காயப்படுத்தும். ஆனா, அதையெல்லாம் பொருட்படுத்த ஆரம்பிச்சிட்டால் உன் நிம்மதி போயிடும்’னு அடிக்கடி சொல்வார். வாழ்க்கையில் துயரங் களின் உச்சத்துக்குப் போனபோதெல்லாம் அப்பாவின் அந்த அட்வைஸ்தான் என்னை மீட்டெடுத்திருக்கு" என்று அன்பு பொங்க பேசியிருக்கிறார்.

இவருடைய பேட்டியை முழுமையாக படிக்க...

`ஒரே வெட்டவெளியா இருக்கு...' - பிரெஞ்ச் சைக்கிளிஸ்ட்டுகளை நட்ட நடுரோட்டில் விட்ட கூகுள் மேப்

'சந்துக்குள்ள போகணுமா...பொந்துக்குள்ள போகணுமா?', 'ஏன் ஆண்டிப்பட்டில இருந்து அமெரிக்க போகணுமா?' - இந்த 'டெக்' காலத்தில் நம் ஆட்கள் மிகவும்... பெரிதும் நம்பியிருப்பது 'கூகுள் மேப்'-ஐ தான்.`நடுகாட்டில் க... மேலும் பார்க்க

Only Veg: `அசைவம் தடை செய்யப்பட்ட 6 இந்திய நகரங்கள்..' எந்தெந்த நகரங்கள் தெரியுமா?!

'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தியா. மொழி, கலாச்சாரம் மாறுப்பட்டிருப்பதுப்போல, இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுகள் வேறுபடுகின்றன. அதிலும் சில நகரங்களில் மத மற்றும் ஆன்மீக நம்பி... மேலும் பார்க்க

ஒரு சொல்; ஒரு படம்; ஒரு சம்பவம்... கண்களை கலங்க வைக்கும் சில நிமிடங்கள்! | My Vikatan

2024 முடிந்து 2025 ம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. இப்படியும் கூட மனங்களா என யோசிக்க வைக்கும் சில விநோதமான வாழ்வியல் நிமிடங்களை இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.அனுபவிக்க தயாராக வாருங்கள் செல்வோம்..அன்றைய... மேலும் பார்க்க

Hindenburg: 'ஆம்புலன்ஸ் டிரைவர் முதல் ஹிண்டன்பர்க் சாம்ராஜ்யம் வரை...' - யார் இந்த நேட் ஆண்டர்சன்?!

நேட் ஆண்டர்சன் - பல பெரும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு கிலியாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பின்னால் இருந்த ஒற்றை ஆள்.ஈரோஸ், நிக்கோலா, அதானி...என மோசடி செய்யும் நிறுவனங்களின் முகத்திரையை கிழித்... மேலும் பார்க்க

Hindenburg: `எலான் மஸ்க் டு அதானி' -ஹிண்டன்பர்க் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மோசடிகள்!

'நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா...நான் அடிச்ச 10 பேரும் டான் தான்!' என்கிற கே.ஜி.எஃப் மாஸ் டயலாக் யாருக்கு பொருந்துமோ, இல்லையோ...நிச்சயம் 'ஹிண்டன்பர்க் நிறுவன'த்திற்கு செட் ஆகும்.ஹிண்டன்பர்... மேலும் பார்க்க

`தெப்பம் கட்டி கன்னிமாரு சாமி வெச்சு...!' - மேற்கு மாவட்ட மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாளு மாட்டுப்பொங்கலு. இந்தப் பொங்கலை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுவாங்க. மேக்க இருக்க கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அதை சுத்தி இருக்க ஊர்ல மாட்டுப்பொங்கலை எப்படி ... மேலும் பார்க்க