ஆக்லாந்து தொழில்நுட்பபல்கலையுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் மீனாட்சி சூப்பர் ஸ்பெ...
`ஒரே வெட்டவெளியா இருக்கு...' - பிரெஞ்ச் சைக்கிளிஸ்ட்டுகளை நட்ட நடுரோட்டில் விட்ட கூகுள் மேப்
'சந்துக்குள்ள போகணுமா...பொந்துக்குள்ள போகணுமா?', 'ஏன் ஆண்டிப்பட்டில இருந்து அமெரிக்க போகணுமா?' - இந்த 'டெக்' காலத்தில் நம் ஆட்கள் மிகவும்... பெரிதும் நம்பியிருப்பது 'கூகுள் மேப்'-ஐ தான்.
`நடுகாட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது... முட்டுச் சந்திற்குக் கூட்டி செல்கிறது' என்ற புகார்கள் எழுந்தாலும், 'கூகுள் மேப்' மீது பாரத்தைப் போட்டுவிட்டு, இன்னமும் அதை நம்பி பயன்படுத்திக்கொண்டும், பயணப்பட்டுக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறோம்.
இப்படி பயணமான இரண்டு பிரெஞ்ச் சைக்கிளிஸ்ட்டுகளைத் தெரியாத... தேவையில்லாத இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது கூகுள் மேப்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு சைக்கிளிஸ்ட்டுகள் டெல்லியில் இருந்து காத்மாண்டுவிற்கு பயணப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது பயணத்தை டெல்லியில் இருந்து பிலிபெட், தனக்பூர் வழியாக நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவிற்கு செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், இடையில் கூகுள் மேப் உத்திரபிரதேசத்தில் உள்ள பைரேலி பஹேரியை குறுக்கு வழி எனக் காட்ட, அவர்கள் அதை நம்பி அந்த ரூட்டை எடுத்துள்ளனர். இதில் வழிமாறிப்போய் அவர்கள் இருவரும் பைரேலியில் உள்ள சுரைலி டேமை அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவவந்த அந்தக் கிராமத்து மக்களுக்கு, இவர்களது மொழி புரியாமல் போக, இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், போலீஸார் இவர்களுக்கு வழிக்கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இனிமேல் கூகுள் மேப்பை நம்புவோம்...? என வடிவேல் ஸ்டைலில் கமென்ட் செய்துவருகின்றனர்.