13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்
Only Veg: `அசைவம் தடை செய்யப்பட்ட 6 இந்திய நகரங்கள்..' எந்தெந்த நகரங்கள் தெரியுமா?!
'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தியா. மொழி, கலாச்சாரம் மாறுப்பட்டிருப்பதுப்போல, இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுகள் வேறுபடுகின்றன. அதிலும் சில நகரங்களில் மத மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளுக்காக அசைவம் தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கிறது. 'என்ன இது...இந்தியாவிலா?' என்று ஆச்சரியம் எழுகிறது அல்லவா...அந்த நகரங்கள் எவை என்று பார்க்கலாம். வாங்க...
முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 'ரிஷிகேஷ்'. இந்த நகரமானது 'புலன்களின் இறைவன்' என்று அழைக்கப்படும் ஒரு யாத்திரை தலமாகும். இந்த நகரம் முழுவதும் ஆன்மீகம் நிறைந்து காணப்படுவதனால் அசைவ உணவு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான 'வாரணாசி'. இங்கு சைவ கலாச்சாரம் மற்றும் கோவில்கள் பிரதானமாக காணப்படுவதனால் மது மற்றும் அசைவ உணவுகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.
மூன்றாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கை நதி கரையில் அமைந்துள்ள 'ஹரித்துவார்' நகரம். இது இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்குவதால், அசைவ உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
நான்காவதாக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள 'பாலிதானா' நகரம். இங்கே 2014-ம் ஆண்டு இறைச்சி தடை செய்யப்பட்ட நகரமாக ஆனது. இங்கு இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது சட்டப்படி குற்றமாகும்.
ஐந்தாவதாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 'விருந்தாவனம்' நகரம். இது கிருஷ்ணரின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. முதலில் பிருந்தாவனம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப்போக்கில் விருந்தாவனம் என மாறியது. இது முற்றிலுமாக இந்து மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகள் நிறைந்த ஒரு புனித தலமாகும். இதனால் இங்கு அசைவ உணவுகளுக்கும், மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறாவதாக புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ள 'அயோத்தி' நகரம். இங்கு அசைவ உணவு மற்றும் மது விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதைப்போல அசைவம் தடை செய்யப்பட்ட நகரங்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள் மக்களே..