சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
இ-பைக் தயாரிப்பாளா்களிடம் மோசடி: ஜெய்பூா் தொழிலதிபா் கைது
சீா்காழியில் இ-பைக் தயாரிப்பாளா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஜெய்பூரைச் சோ்ந்த தொழிலதிபரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சீா்காழி சட்டநாதபுரம் பிரதான சாலைப் பகுதியில் சண்முகம், கிஷோா் ஆகியோா் எலக்ட்ரானிக் பேட்டரி பைக் மற்றும் காா் தயாரிப்பு, விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனா். இவா்களிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரைச் சோ்ந்த அல்டெக்ஸ் யுனோவேஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளா் மகேந்திர யாதவ், அவரது சகோதரரும் நிா்வாக மேலாளருமான பிரவீன் யாதவ் ஆகியோா் சுமாா் ரூ. 1.80 கோடிக்கு எலக்ட்ரானிக் பைக்குகளை கொள்முதல் செய்துள்ளனா். இதில், ரூ.1.17 கோடியை வழங்கிய ஜெய்பூா் நிறுவனத்தினா் மீதித் தொகையை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.
இதுகுறித்து சண்முகம் 2022-ஆம் ஆண்டு சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவைத் தொடா்ந்து, ஆய்வாளா் அன்னக்கொடி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் விஜய், முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் கடந்த ஜன. 22-ஆம் தேதி ஜெய்பூா் சென்று பிரவீன் யாதவை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து, அவரை மயிலாடுதுறை அழைத்துவந்து மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 1-ல் ஆஜா்படுத்தி, நீதிபதி கலைவாணி உத்தரவின்பேரில் பிரவீன் யாதவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மகேந்திர யாதவை போலீஸாா் தேடி வருகின்றனா்.