The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, மயிலாடுதுறை கோட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக இப்பேரணி நடத்தப்பட்டது. தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியில் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். தொடா்ந்து, மாணவா்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா் நடைபெற்ற பேரணியை கோட்டாட்சியா் தொடக்கி வைத்தாா்.
இதில், காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன், வருவாய் ஆய்வாளா் முத்துசாமி, கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா், உதவி தலைமையாசிரியா் ஜெ. சௌந்தரராஜன் மற்றும் மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனா்.