Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்
டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.
இந்த நிலையில், இன்று காலை ஆம் ஆத்மி கட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், 'இன்று மதியம் மிக மிக மி முக்கிய விஷயம் குறித்து செய்தியாளர் சந்திப்பு' என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, "டெல்லி மக்கள் முன்பு இரண்டு மாடல்கள் தற்போது உள்ளன. ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல். இன்னொன்று, மக்கள் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
ஆம் ஆத்மி அரசால் ஒவ்வொரு மாதமும் டெல்லி மக்கள் 25,000 ரூபாய் வரையில் பலனடைகிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும். காரணம், அந்தத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது மாடலுக்கு எதிரானது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியை ஆளும் பாஜக அரசு 400-500 பேருடைய ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அந்த 400 - 500 பேரும் ஒருவகையில் பாஜக அரசின் பணக்கார நண்பர்கள் ஆவார்கள்" என்று பேசியுள்ளார்.