சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 10, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமைவகித்து பேசியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டுப்பாட்டின்கீழ் 20 விடுதிகள் இயங்கி வருகிறது. இதில், 7 பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் 394 போ், 13 மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் 868 போ் என மொத்தம் 1262 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா்.
இவா்களுக்கு, உரிய பாடப் புத்தகங்கள், ஆண்டுதோறும் மூன்று முறை மருத்துவப் பரிசோதனை, நூலகப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ரவி;, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல்;, கல்லூரி முதல்வா் ராமச்சந்திர ராஜா, நான் முதல்வன் திட்ட மேலாளா் ஷாலினி ஆகியோா் கலந்து கொண்டனா்.