செய்திகள் :

Wayanad: ``புலி பாய்ந்த போது ஷீல்டு இருந்ததால் தப்பித்தேன்" -புலியைத் தேடிச் சென்ற போலீஸ் உருக்கம்

post image

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் அச்சப்பன். இவரது மனைவி ராதா (47). இவர்களுக்கு அனிஷா, அஜிஸ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ராதா கடந்த சில நாட்களுக்கு முன் பிரியதர்ஷினி காபி எஸ்டேட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் ரோந்து சென்ற தண்டர்போல்ட் படையினர் ராதா புலி தாக்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.

காஃபி எஸ்டேட்டில் வைத்து ராதாவை தாக்கிய புலி  சற்று தூரம் இழுத்துச் சென்று கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவற்றை தின்றுள்ளது. தலை தனியாக, உடல் தனியாக கிடந்த ராதாவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புலி தாக்கியதால் இறந்த ராதா

எதிர்கட்சியான காங்கிரஸும் இதே விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், புலியை சுட்டுக் கொல்ல கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. வனப்பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டு புலியை கண்காணிக்க வாய்ப்பு இல்லை என்பதால், யானை மீது வீரர்கள் காட்டுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாரக்கொல்லி பகுதியில் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டதுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸார் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று புலியை தேடிச்சென்ற ஆர்.ஆர்.டி பிரிவு போலீஸ் ஜெயசூர்யா என்பவர் மீது புலி தாக்கியது. புலி நகத்தால் கிழித்ததில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மானந்தவாடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில அமைச்சர் ஓ.ஆர்.கேளூ கூறுகையில், "ஜெயசூர்யா நலமாக உள்ளார். புலியை இதுவரை சுட்டுக்கொல்ல முடியவில்லை. புலியை பிடிக்க வைத்துள்ள கூண்டுக்கு அருகே புலி சிலமுறை சென்றது. ஆனால் கூண்டுக்குள் செல்லவில்லை" என்றார்.

புலி தாக்கியதில் காயம் அடைந்த ஜெயசூர்யா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயசூர்யா கூறுகையில், "புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து 15 வீரர்கள் சேர்ந்து பாதுகாப்புக்கான ஷீல்டு உள்ளிடவைகளுடன் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தோம். நான் கடைசியாக சென்றுகொண்டிருந்தேன். பின்பக்கம் இருந்து புலி என்மீது பாய்ந்தது. நான் ஷீல்டால் தடுத்தபடி கீழே விழுந்தேன். என்மீது புலி இருந்தது. எனக்கும் புலிக்கும் இடையே ஷீல்டு இருந்ததால் பெரிய தாக்குதலில் இருந்து தப்பித்தேன். புலி நகத்தால் கீறியதால் வலது கையில் காயம் ஏற்பட்டது. உடன் வந்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், புலியின் மீதுபடவில்லை. துப்பாக்கி சத்தம் கேட்டதும் புலி காட்டுக்குள் ஓடிவிட்டது" என்றார்.

வயநாடு: துப்பாக்கிச்சூட்டில் தப்பிய புலி, சடலமாக கண்டெடுப்பு - குழப்பத்தில் வனத்துறை

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகில் உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதி காப்பி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி ஒன்று தாக்கி கொன்றது. அவரின் ... மேலும் பார்க்க

விருதுநகர்: வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து; 19 பயணிகள் படுகாயம்!

விருதுநகரில் இருந்து கிளம்பிய டவுன் பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்ததில் 19 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது பேசியவர்கள், "விருதுநகர் பழைய... மேலும் பார்க்க

Wayanad: ``கண்முன்னே புலி கடித்துக் குதறியது; காப்பாற்ற முடியவில்லை'' -கண்ணீர் விடும் தொழிலாளர்கள்

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுத... மேலும் பார்க்க

ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து 8 பேர் பலி; மகாராஷ்டிரா சோகம்...

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் உள்ள ஜவஹர் நகரில் ஆயுத தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இத்தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்... மேலும் பார்க்க

``மரணம் வீணாக கூடாது; பாராகிளைடிங் விதிகளை கடுமையாக்க வேண்டும்" - Zoho ஸ்ரீதர் வேம்பு உருக்கம்

சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு, 'பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``... மேலும் பார்க்க

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம்

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை ... மேலும் பார்க்க