செய்திகள் :

Wayanad: ``கண்முன்னே புலி கடித்துக் குதறியது; காப்பாற்ற முடியவில்லை'' -கண்ணீர் விடும் தொழிலாளர்கள்

post image

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளுடன் மனித எதிர்கொள்ளல்கள் என்பது தவிர்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகின்றன.

புலி தாக்குதல்

இந்நிலையில், வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்கிற பெண் தொழிலாளி இன்று காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு பதறிய சக தொழிலாளர்கள் புலியை விரட்டி ராதாவின் சடலத்தை மீட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வனவிலங்குகளை கண்காணிக்க வனத்துறை தவறியதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோகம் குறித்து தெரிவித்த சக தொழிலாளர்கள், "மானந்தவாடி, பஞ்சாரக்கொல்லி பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் பெண்கள் ஒன்றாக வேலை செய்துகொண்டிருந்தோம். எங்களுக்கு பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா காபி செடிகளுக்கு அடியில் சிக்கி திடீரென அலறித்துடித்தார். பதறியடித்து அருகில் சென்று பார்த்த போது புலி ஒன்று ராதாவை கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. கூச்சலிட்டும் கற்களை தூக்கி எறிந்தும் விரட்டியடித்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நொடியில் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்" என கண்ணீர் வடிக்கின்றனர்.

உயிரிழந்த ராதா

இது குறித்து தெரிவித்த வயநாடு வனத்துறையினர், "47 வயதான ராதா என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் கணவர் வனத்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். மக்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதா குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து 8 பேர் பலி; மகாராஷ்டிரா சோகம்...

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் உள்ள ஜவஹர் நகரில் ஆயுத தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இத்தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்... மேலும் பார்க்க

``மரணம் வீணாக கூடாது; பாராகிளைடிங் விதிகளை கடுமையாக்க வேண்டும்" - Zoho ஸ்ரீதர் வேம்பு உருக்கம்

சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு, 'பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``... மேலும் பார்க்க

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம்

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை ... மேலும் பார்க்க

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி' பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் "ராகுல் டிக்கி", சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பலூன் திருவிழா: கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன்... கேரளாவில் மீட்பு!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்ச... மேலும் பார்க்க

பஞ்சாப்: விபத்தா? தற்கொலையா? - துப்பாக்கியைத் துடைக்கும்போது உயிரிழந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குர்பிரீத் கோகி. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குர்பிரீத் நேற்று 11 மணியளவில் தனது வீட்டில் தனது துப்பாக்கியை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தார். அந்நே... மேலும் பார்க்க