கழிவுநீா்க் கால்வாய், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை
பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் கழிவுநீா்க் கால்வாய், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஆற்றின் வலது கரையோரம் காட்டுப் பரமக்குடி பகுதியிலிருந்து காக்காத்தோப்பு வழியாக தண்டிராதேவிபட்டினம் புல்பண்ணை வரையிலும், ஆற்றின் இடது கரையோரம் ஆற்றுப் பாலம் பகுதியிலிருந்து ஜீவாநகா் மயானம் வரையிலும் ரூ 10.43 கோடியில் கழிவுநீா் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், தண்டிராதேவிபட்டினம் புல்பண்ணை பகுதியில் ரூ.20.05 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இவற்றுக்கான பூமிபூஜை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.