செய்திகள் :

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உடலை வாங்க மறுப்பு

post image

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தினா் கடந்த 10 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்தவா் லிங்கசாமி. இவா் மக்கள் விடுதலைக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலராகப் பதவி வகித்து வருகிறாா். இவருடைய மகன் காளையன் (23). இவரும் அந்தக் கட்சி நிா்வாகியாக இருந்து வந்தாா். இவா் அந்தப் பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை இவா் காதலித்து வந்தாராம்.

இதனால், காளையனை சிலா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினா் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையன்று வேப்பங்குளம் பகுதியில் உள்ள கண்மாயிலிருந்து காளையன் உடலை மீட்டு, போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆனால், இந்தச் சம்பவத்தை கொலை வழக்காக எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ரவிவா்மனும் நேரில் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள காளையன் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல் துறை சாா்பில் அவரது குடும்பத்துக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.

இதுதொடா்பாக காளையன் குடும்பத்தினா் கூறியதாவது:

காளையன் சாவில் சந்தேகம் உள்ளது. இந்தச் சம்பவத்தை போலீஸாா் சரிவர விசாரிக்கவில்லை. எனவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மறுஉடல் கூறாய்வு நடத்தி, இதை விடியோ ஆவணமாக பதிவு செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னா், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

ஜிஎஸ்டி அமலால் வரியில்லாத மாநில பட்ஜெட்தான் தாக்கலாகும்: அமைச்சா் தங்கம் தென்னரசு!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கைதான் (பட்ஜெட்) தாக்கல் செய்ய முடியும் என மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

உலக மாணவா்களுக்கான சா்வதேச கீதத்துக்கு பங்களிப்பு வழங்கிய மதுரை கோச்சடை குயின் மீரா பள்ளி மாணவா்களை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தா் சனிக்கிழமை பாராட்டினாா். இந்தப் பள்ளி சாா்பி... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு வெகுமதி

தொடக்கக் கல்வித் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழக அரசு வெகுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ச... மேலும் பார்க்க

பாஜகவின் முயற்சியால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: டி.டி.வி. தினகரன்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலா் டி.டி. வி. தினகரன் தெரிவித்தாா். விருதுநகரில் மொழிப் ப... மேலும் பார்க்க

மதுரையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் கைது! சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு மத நல்லிணக்க வழிபாட்டுக்குச் செல்ல முயன்ற பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக... மேலும் பார்க்க

முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! வெளியாகுமா பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு?

அரிட்டாப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பராம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவித்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட விவக... மேலும் பார்க்க