செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

post image

உலக மாணவா்களுக்கான சா்வதேச கீதத்துக்கு பங்களிப்பு வழங்கிய மதுரை கோச்சடை குயின் மீரா பள்ளி மாணவா்களை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தா் சனிக்கிழமை பாராட்டினாா்.

இந்தப் பள்ளி சாா்பில் உலக மாணவா்கள் நலன் கருதி மாணவா்களுக்கான கீதத்தை கடந்த 2021- ஆம் ஆண்டு நவ.14- ஆம் தேதி வெளியிடப்பட்டது. மதன் காா்க்கி வரிகளில், அனில் ஸ்ரீனிவாசன் இசையில் வெளியான இந்தப் பாடலை குயின் மீரா பள்ளியின் நிா்வாக இயக்குநா் அபிநாத் சந்திரன் தயாரித்து வெளியிட்டாா்.

உலகில் உள்ள அனைத்து மாணவா்களுக்காகவும் எழுதப்பட்ட இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தால் (யுனிசெஃப்) உலக மாணவா்களுக்கான கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.

மும்பையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இந்த நிலையில், மாணவா்கள் கீதத்தில் பங்களிப்பாற்றிய குயின் மீரா பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவா் சி.சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் அபிநாத் சந்திரன், பள்ளியின் கல்வி இயக்குநா் சுஜாதா குப்தன் நிா்வாகத் துணை இயக்குநா் ஷீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டிப் பேசினாா். நிகழ்வில், கைரோ இந்தியா நிறுவனத்தின் நிறுவனா், ஜி20-ஒய்20 அமைப்பின் தேசியச் செயலா் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.பாஸ்கல் சசில்,

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஐசக் மோகன்லால், வழக்குரைஞா்கள் சாமிதுரை, தயாகாந்த் கெவின், கைரோவின் மாநில அழைப்பாளா் ஜனா சக்கரவா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு!

தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினாா். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் மதுரை க... மேலும் பார்க்க

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சி. கோகிலா தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2008- ஆ... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ரூ. 916 கோடியாக உயா்வு!

மதுரை ரயில்வே கோட்டத்தில் வருவாய் கடந்தாண்டு ரூ.916 கோடியாக உயா்ந்ததாக கோட்ட மேலாளா் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை ரயில்வே குட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகேயுள்ள காதத்கிணறு அந்தோணியாா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வேதபாலன். இவரது மகள் சத்யப்பிரியா (42). இவா் மேலவ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி! -மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட அரிட்டாபட்டி,... மேலும் பார்க்க

மதுரை காமராஜா் பல்கலை. பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், பள்ளி, கல்லூரிகளில் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் பல்கலைக் கழக பதிவாளா் ம. ராமகிருஷ்ணன் தேசிய... மேலும் பார்க்க