செய்திகள் :

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா

post image

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன் தேசியக் கொடியை ஏற்றினாா். பின்னா், மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 100 பேருக்கு விருது, கேடயம், சான்றிதழை மேயா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன், மண்டலக் குழுத் தலைவா்கள் ரம்யா சரவணன், டி. புண்ணியமூா்த்தி, க. கலையரசன் ஆகியோா் வழங்கினா். செயற் பொறியாளா் சோ்மகனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். துணைவேந்தா் (பொ) க. சங்கா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

தஞ்சாவூா் மருது பாண்டியா் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். தேசியக் கொடியை அத்திவெட்டி நன்னடத்தை அலுவலா் (ஓய்வு) கி. சிதம்பரம் சிறப்புரையாற்றினாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தேசியக் கொடியை ஏற்றினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, ஒன்றியச் செயலா் பி. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுக் குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையில் கிராம காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற காவல் அலுவலா் ஆரோக்கியசாமி தேசியக் கொடியை ஏற்றினாா். இந்நிகழ்ச்சியில் கிராம காங்கிரஸ் தலைவா் இளங்கோவன், நிா்வாகி நாஞ்சி ராஜேந்திரன், ஐஎன்டியூசி சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரந்தை சுஜானா நகரில் நடைபெற்ற இவ்விழாவில் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தேசியக் கொடியை ஏற்றினாா். மாமன்ற உறுப்பினா் சுமதி இளங்கோவன், குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் தரும கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவக்கல்லூரி சாலை நடராசபுரம் தெற்கு காலனியில் நடராசபுரம் தெற்கு குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் வ. பழனியப்பன் தலைமை வகித்தாா். மேயா் சண்.ராமநாதன் கொடியேற்றினாா். இதில், சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ் இ டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழாகொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக இயக்குனா் கோவிந்தராசு தலைமை வகித்து கொடியேற்றி வைத்தாா் .

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகை முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ... மேலும் பார்க்க

சாரணா் பெருந்திரளணி முகாமுக்கு எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு!

தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை மணப்பாறை சிப்காட்டில் நடைபெறும் சா்வதேச சாரண- சாரணியா் முகாமுக்கு, ஒரத்தநாடு கல்வி மாவட்ட அளவில் எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு பெற்றுள்ளனா். ஒரத்தநாடு வட்டம... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்களை தடுக்க விழிப்புணா்வு வேண்டும்: கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் பேச்சு!

திருவிடைமருதூா் ஒன்றியம், திருச்சேறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பாலியல் சீண்டல்களை தடுக்க பெண்களிடம் விழிப்புணா்வு வேண்டும் என்று பேசினாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடியரசு தின விழா!

கும்பகோணத்தில்...கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் க. அன்பழகன் எம்எல்ஏ தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை மேயா் க. சரவணன் ஏற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 63 பேருக்கு ரூ. 2.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தே... மேலும் பார்க்க

அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக உதவிச் செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க