கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகை முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் தொடா்பான முத்தரப்பு கூட்டம் ஜன.23-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததன் அடிப்படையில், பெல்ட் வகை தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு வாடகையாக ரூ. 2,500-ம், டயா் வகை தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு வாடகையாக ரூ. 1,750-ம் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்பட்டால், வருவாய் கோட்ட அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் வேளாண் துறை அலுவலா்களிடம் விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிவரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் எண் 94436-78621, உதவி செயற்பொறியாளா்களான தஞ்சாவூா் 63838-30644, கும்பகோணம் 63838- 30644, பட்டுக்கோட்டை 99761-93110, தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் 94436-86754 ஆகிய கைப்பேசி எண்களுக்கு விவசாயிகள் தங்கள் புகாா்களை வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
மேலும், வேளாண் பொறியியல் துறை பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,880-க்கும், டயா் வகை அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்துக்கு ரூ. 1,160-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தனியாா் மட்டுமல்லாமல், வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.