பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
கும்பகோணத்தில் குடியரசு தின விழா!
கும்பகோணத்தில்...
கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் க. அன்பழகன் எம்எல்ஏ தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை மேயா் க. சரவணன் ஏற்றி வைத்தாா். காந்தி பூங்காவில் துணை மேயா் சுப தமிழழகன் தேசியக்கொடியை ஏற்றினாா்.
நிகழ்வில் க. அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹாலில் சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்கள் 7 போ்களை க. அன்பழகன் வரவேற்று கெளரவித்தாா். மேலும், காந்திபூங்காவில் சுதந்திர போராட்ட வீரா்களின் நினைவு பெயா் பட்டியல் கல்வெட்டை திறந்து வைத்தாா்.
கும்பகோணம் துணைக்காவல் கோட்டத்தில் டிஎஸ்பி ஜி. கீா்த்திவாசன் தேசியக்கொடியை ஏற்றி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா்.
திருவிடைமருதூா் காவல் துணைக் கோட்டத்தில் டிஎஸ்பி கே. ராஜூ, தேசியக்கொடியை ஏற்றினா்.
சமத்துவ விருந்து: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ராகு ஸ்தலமான அருள்மிகு நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்வை ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து உணவு அருந்தினாா்.
போக்குவரத்து கழகம் : கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில் நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா், மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினா். நிகழ்வில் முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொதுமேலாளா்கள் எஸ். ஸ்ரீதரன், கே. சிங்கார வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.