இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் தடை
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக உதவிச் செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது: அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், கருப்பு முதலியாா்கோட்டை, புளியக்குடி, அருந்தவபுரம், புத்தூா், ரயிலடி, கொக்கேரி, பீமனோடை, வடபாதி, திருக்கோவில்பத்து ஆகிய ஊா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.