Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்... ...
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு!
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(ஜன. 27) ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒருபகுதியாக ஒலக்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு. க. ஸ்டாலின், அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் நோயாளிகள், புற நோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் கையிருப்புப் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
அப்போது முதல்வருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டக்டர் சி. பழனி, வட்டார மருத்துவ அலுவலர் மரு. செந்தில் குமார், மருத்துவ அலுவலர் மரு. ரகுராம் மற்றும் பிற உயரதிகாரிகள் உடனிருந்தனர்.