செய்திகள் :

Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்... கை கொடுக்குமா?

post image

இந்த மாதத் தொடக்கத்தில் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதில் இருந்து, 'அடுத்த கனடா பிரதமர் யார்?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்த ரேசிலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ஒருவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லா.

பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் அவர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமராக கனடாவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன். இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பும் தனது தேர்தல் பிரசாரத்திலும், தற்போதும் இதே கொள்கையோடு தான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபி தல்லா (Ruby Dhalla)

இதற்கு முன்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரூபி தல்லா, "மிக்க நன்றி. கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றிகடன் பட்டுள்ளேன். முதல் வேற்று நிறத்தை (கனடா அல்லாத) சேர்ந்த பெண்ணை லிபரல் கட்சியின் தலைவராகவும், அடுத்த கனடா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தருணத்தில் இருக்கிறோம்" என்று பேசியுள்ளார்.

இவருடைய இந்த முன்னெடுப்புகள் கைக்கொடுக்குமா...லிபரல் கட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்குமா என்ற கேள்விக்கு பதில் வரும் மார்ச் 8-ம் தேதி கிடைத்துவிடும்.

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan:சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் ... மேலும் பார்க்க

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்... மேலும் பார்க்க

கொடி கம்பம் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பா? அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள் | Decode

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்திருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் அலசப்பட்டிருக்கிறது மேலும் பார்க்க

`ஆளுநருக்கு நடத்தை விதிகள் முதல் வக்ப் மசோதா வரை' - திமுக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 வரும் பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்... மேலும் பார்க்க