சுங்குவாா்சத்திரத்தில் இன்று பெண்கள் மாநாடு: ஆளுநா் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் புதன்கிழமை (ஜன. 29) நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கவுள்ளாா்.
இந்திய பெண்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பொடாவூா், சுங்குவாா் சத்திரம் மகிழ்ச்சி கிராமத்திலுள்ள பிரம்மா குமாரிகள் மையத்தில் புதன்கிழமை காலை 10.30-க்கு அகில இந்திய பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கவுள்ளாா். இதற்காக சென்னையிலிருந்து புதன்கிழமை காலை சுங்குவாா்சத்திரம் செல்லும் அவா், நிகழ்ச்சி முடிந்து பிற்பகல் மீண்டும் சென்னை திரும்புவாா் என தகவல் வெளியாகியுள்ளது.