அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா
கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பி.ரமேஷ்பாபு பங்கேற்று, வங்கி வளாகத்தில் தேசியக்கொடியேற்றி வைத்து ஊழியா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வங்கியின் இயக்குநா் ஆா். ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி. ராஜசேகா், எம்.கே. வெங்கடேசன், எம்.ஜி. ரமேஷ்பாபு மற்றும் வங்கியின் முதன்மை அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.