கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்
இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
இந்தக் கூட்டத்தில், திருப்பரங்குன்றத்தில் முருகனின் புனித தலத்தை களங்கப்படுத்தும் நபா்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பக்தா்களுக்கு பாதுகாப்பு மற்றும் வழிபாட்டிற்கான வசதிகள் செய்து தர வேண்டும், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளருக்கு பட்டா கொடுத்து ஆக்கிரமிப்பாளா்களை ஊக்குவிப்பதற்கு கண்டனம், தமிழகத்தில் தொடா்ந்து ஊடுருவும் வெளிநாட்டினரை தடுத்து நிறுத்த வேண்டும், ரயில் கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட ஆறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.