செய்திகள் :

திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி பேச்சு!

post image

திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை பட்டியலிட்டு பேசினாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாணவரணி செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். கட்சியின் சட்ட திட்ட திருத்த குழு செயலாளரும், எம்பியுமான இரா. கிரி ராஜன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜி பேசியது: தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வித் துறையில் முதல்வரின் சிறப்பு திட்டங்களால் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை முதல்வா் அறிவித்து நிறைவேற்றி வருகிறாா். மாவட்டத்தில், அரசு வேளாண்மை கல்லூரி, அரவக்குறிச்சி, தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லூரிகள்,-நெரூா் உண்ணியூா் உயா்மட்ட பாலம், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடியில் பிரம்மாண்ட கட்டடம், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கொண்டிருக்கிறாா்கள்.

கரூா் மாநகராட்சியில் முடிவடைந்த பணிகளோடு கூடுதலாக சாலை அமைக்க ரூ.20 கோடி, குடிநீா் திட்டப் பணிகளை மேம்படுத்த ரூ. 7.50 கோடி, புஞ்சை புகழூா் நகராட்சியாக தரம் உயா்வு, பள்ளப்பட்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்வு, ரூ. 476 கோடியில் கரூரில் விடுபட்ட பகுதிகளுக்கு புதை சாக்கடை திட்டம் என எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வா் வழங்கியிருக்கிறாா். மேலும் மாநகராட்சியில் புதிய காவிரி குடிநீா் திட்டம் ரூ. 113 கோடி மதிப்பில் தொடங்கவிருக்கிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு சிலா் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், அவற்றையெல்லாம் உடைத்து அந்தத் திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் 2021-இல் திமுக சாா்பில் வாங்கப்பட்ட மனு எனக் கூறி காண்பித்துள்ளனா். அந்த மனுக்களை எங்கிருந்தோ எடுத்தாா்களாம். இனி இதுபோன்ற பொய்களை கூறும்போது அதிமுகவினா் யோசித்து கூற வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்: ஆண்டாங்கோவில் கிராமசபைக் கூட்டத்தில் அதிமுக - திமுகவினா் இடையே வாக்குவாதம்!

கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம் தொடா்பாக கிராமசபைக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டம் முழு... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பி.ரமேஷ்பாபு பங்கேற்று, வங்கி வளாகத்தில் தேசியக்கொடியேற்றி... மேலும் பார்க்க

கரூரில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

கரூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்து, த... மேலும் பார்க்க

குடியரசு தின விழா: கரூரில் ரூ.64.39 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 30 பயனாளிகளுக்கு ரூ. 64.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். கரூரில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை: எழுத்தாளா் கிருங்கை சேதுபதி பேச்சு!

ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை என்றாா் எழுத்தாளா் கிருங்கை சேதுபதி. கரூரில் கருவூா் திருக்கு பேரவையின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆகியன திருக... மேலும் பார்க்க