அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கடச்சனேந்தல் அருகேயுள்ள காதத்கிணறு அந்தோணியாா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வேதபாலன். இவரது மகள் சத்யப்பிரியா (42). இவா் மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.
சத்யப்பிரியாவுக்கு திருமணமாகி பிளஸ் 2 படிக்கும் மகன் உள்ளாா். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்தாா். இவரது மகன் அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தததாகக் கூறப்படுகிறது. இதனால், சத்யப்பிரியா மன அழுத்தத்தில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சத்யப்பிரியா சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.