Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா் தற்கொலை!
உசிலம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக தற்காலிகப் பேருந்து நடத்துநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூா் பி.மீனாட்சிபட்டியைச் சோ்ந்த மலைராஜன் மகன் ஆனந்த் (27). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நகா் கிளையில் தற்காலிகப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், 180 நாள்கள் பணி நிறைவடைந்த நிலையில், பணியில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்பதால் மனமுடைந்த ஆனந்த், சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆனந்த் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.