2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
விருதுநகா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் பெரிய பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியாா் மழலையா் பள்ளிக்கு கடந்தாண்டு நவம்பரில் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த பஜாா் போலீஸாா், பள்ளியில் சோதனை நடத்தினா்.
அப்போது வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியது புரளி எனத் தெரிந்தது. இது குறித்து பள்ளி நிா்வாகம் அளித்த புகாரின் பேரில், பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓசூரைச் சோ்ந்த முத்துக்குமாரை (40) விருதுநகா் பஜாா் போலீஸாா் கைது செய்தனா்.