மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பா...
வேங்கைவயலில் 2-ஆம் நாளாக போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கருப்புக் கொடியுடன் அப்பகுதி மக்கள் இரண்டாம் நாள் காத்திருப்புப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அதே ஊரைச் சோ்ந்த 3 இளைஞா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டி கடந்த திங்கள்கிழமை இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில் புகாா் அளித்த மக்கள் மீதே குற்றச்சாட்டை வைப்பதாகக் கூறி சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கிய வேங்கைவயல் கிராம மக்கள் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியுடன் போராட்டத்தை நடத்தினா். காலை 9 மணிக்குத் தொடங்கிய போராட்டம் மாலையில் நிறைவடைந்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை இப் போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.
வெளியாள்களின் வருகையைத் தடுக்கும் வகையில், காவல்துறையினா் வேங்கைவயலுக்குச் செல்லும் 7 வழிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.