மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள்
விராலிமலையில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்வு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஹிந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிா்நீத்த மொழிப்போா் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாள் திமுக கட்சி சாா்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் விராலிமலை மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் விராலிமலை சோதனைச்சாவடியில் வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில், மொழிக்காக உயிா் நீத்த தியாகிகள் திருவுருவப் படம் அமைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், விராலிமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் இளங்குமரன் தலைமையில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.