Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
குடியரசு தின கட்டுரைப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி 3- ஆம் இடம்
குடியரசு தின விழா கட்டுரைப் போட்டியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி. தா்ஷினி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கல்வி தொடா்பாக பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட திட்டமிடல், ஒருங்கிணைப்பு மையம் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி. தா்ஷினி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றாா்.
இவருக்கு ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவி வி. தா்ஷினியை பாராட்டி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ் வழங்கினாா்.